ETV Bharat / state

தொடர் விடுமுறை: உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய காரணம் என்ன?

நீலகிரி: இ-பாஸ் போன்ற காரணங்களால் உதகைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.

உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய காரணம் என்ன?

author img

By

Published : Oct 25, 2020, 8:34 PM IST

கரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து 172 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இதனால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா தொழிலாளர்கள் வாழ்வாதாரமின்றி பாதிக்கப்பட்டனர். இதனால் மே மாதத்தில் நடைபெறயிருந்த மலர் கண்காட்சியும் ரத்து செய்யபட்டது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. சுற்றுலாவை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த மாதம் முதல் தோட்டகலைத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களான அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, கட்டேரி பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, கோத்தகிரி நேரு பூங்கா போன்றவைத் திறக்கப்பட்டன.

அன்று முதல் சுற்றுலாப் பயணிகள் நீலகிரிக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இ-பாஸ் விண்ணப்பிக்கும் போது ’சுற்றுலா’ என தனியாக விண்ணப்பித்து வரலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது போன்ற கட்டுப்பாடுகளால் பெரும்பாலானோர் சுற்றுலா வருவதைத் தவிர்த்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஆயூத பூஜை, விஜய தசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையின் போது சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்த நிலையில், இந்தாண்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

கரோனா காரணமாக குறைந்த அளவான இ-பாஸ் வழங்கப்படுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கர்நாடாக அரசுக்கு சொந்தமான பூங்காவும் இன்று (அக்.,25) வெறிச்சோடி காணப்படுகிறது.

உதகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைய காரணம் என்ன?

இந்தப் பூங்கா முழுவதும் கார்னீசியன், பெட்டுனியா, சால்வியா, ஆஸ்டர் உள்ளிட்ட பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் கண்டு ரசிக்கத் தான் பார்வையாளர்கள் இல்லை.

இதையும் படிங்க:தொடர் விடுமுறை: கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.