நீலகிரி: மாவட்டத்தில் 97 விழுக்காடு பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விரைவில் 100 விழுக்காடு எட்ட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது.
இந்நிலையில் மதுவுக்கு அடிமையாக உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்னும் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீலகிரியில் மதுப்பிரியர்கள் கட்டாயமாக முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே மதுபானம் வழங்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக மதுப்பிரியர்கள் அதற்கான சான்றிதழை கடை ஊழியரிடம் காண்பிக்க வேண்டும். இல்லை எனில் மதுபானம் வழக்கப்பட மாட்டாது. இதனால் கரோனா தடுப்பூசி போடாமல் உள்ள மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கனிசமாக உயரும் கரோனா - வடமாநிலத்தில் புதிய வைரஸ்