நீலகிரி மாவட்டம் குன்னூர் அம்பிகாபுரம் காளியம்மன் கோயில் அருகே பொறியாளர் முருகன் என்பவரது பங்களாவிற்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேட் ஏறி குதித்து உள்ளே சிறுத்தை வந்தது. அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது.
இந்த சிறுத்தை தொடர்ந்து அம்பிகாபுரம் பகுதியில் முகாமிட்டிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. கூண்டிற்கு அருகில் இன்று வந்து சென்ற சிறுத்தை இன்னும் சிக்காமல் உள்ளது.
இதையும் படிங்க: விக்ரமின் அசத்தலான கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு