நீலகிரி மாவட்டம், குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக, அப்பகுதி மக்கள் வனத்துறைக்குத் தகவல் அளித்தனர்.
அதனடிப்படையில் அங்கு விரைந்த வனத்துறை அலுவலர்கள் சிறுத்தை சுருக்குக் கம்பியில் சிக்கி உயிரிழந்திருப்பதை உறுதிசெய்தனர். ஐந்து வயதுடைய பெண் சிறுத்தை கழுத்தில் சுருக்குக் கம்பி சிக்கி இறந்ததை உறுதி செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக, கக்காச்சி பகுதியைச் சேர்ந்த கிளிஞ்சாடா பகுதியைச் சேர்ந்த செல்வன்(40), முருகன் (38) ஆகிய இருவரை சந்தேகத்தின்பேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவரும் கடந்த பல மாதங்களாக சுருக்குக் கம்பி வைத்து காட்டுப்பன்றி, மான், முயல் உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி வந்தது தெரிய வந்தது.
காட்டுப்பன்றிக்கு வைத்த சுருக்குக் கம்பியில் சிக்கி சிறுத்தை உயிழந்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதை அடுத்து வனத்துறையினர் இருவரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க:சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை பலி: வனத்துறை விசாரணை!