நீலகிரி: கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
மண் சரிவு ஏற்பட்ட போது, எந்த வாகனமும் இந்தப் பகுதியில் செல்லாததால், விபத்துகள் தவிர்க்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்கள் பாதையில் சரிந்து கிடந்த மண் மற்றும் பாறைக்கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.