ETV Bharat / state

கிணற்றில் மிதந்த வடமாநில தொழிலாளர் உடல்; போலீஸ் விசாரணை

குன்னூர் அருகே வடநாட்டு பணியாளர் கிணற்றில் பிணமாக கிடந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் மிதந்த வடமாநில தொழிலாளர் உடல்; போலீஸ் விசாரணை
கிணற்றில் மிதந்த வடமாநில தொழிலாளர் உடல்; போலீஸ் விசாரணை
author img

By

Published : Aug 10, 2022, 12:25 PM IST

Updated : Aug 10, 2022, 12:53 PM IST

நீலகிரி: தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் என பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கேத்தி பாலடா பகுதியில் உலகப்பன் என்பவருக்கு சொந்தமான SBA காரட் கழுவும் இயந்திர வளாக கிணற்றில், அங்கு வேலை செய்த பிரிய ரஞ்சன் மிஸ்ரா (வயது 33) என்பவரது உடல் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டது. கேத்தி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு நாட்களாக பிரிய ரஞ்சன் மிஸ்ரா காணாமல் போனது தெரியவந்தது.

இவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 8 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. மனைவி பூர்வீக கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் கிணற்றில் பிணமாக கிடந்துள்ளார்.

கேத்தி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: நீலகிரியில் தொடர் மழையால் பூண்டு சாகுபடி பாதிப்பு

Last Updated : Aug 10, 2022, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.