நீலகிரி: ஒமைக்ரான் பரவல் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு சார்பில் இன்று ஊரடங்கு அறிவித்திருந்தது.
இதனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டிருந்தன.
உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அனைத்து சுற்றுலா வாகனங்களும் அரசு பஸ்களும் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தன.
குன்னூர்-ஊட்டி ரயில் இயக்கம்
இந்நிலையில் குன்னூர் - ஊட்டி இடையே இயக்கப்படும் மலைரயில் மற்றும் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே இயக்கப்படும் மலை ரயில் இன்றும் இயக்கப்பட்டது.
ஏற்கெனவே சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்திருந்த காரணத்தினால் மலை ரயில் தடையின்றி இயக்கப்பட்டது.
மலை ரயிலில் சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்த போதிலும், மற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் அத்தியாவசியத் தேவையான உணவு மற்றும் நீர் போன்றவை வெளியிடங்களில் கிடைக்காமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் பொங்கலுக்குப் பிறகு ஊரடங்கு பிறப்பித்து இருக்கலாம் என்றும்; இது போன்ற நேரங்களில் சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா செல்ல முடியாமலும்; உணவு, குடிநீர் கிடைக்காமலும் தவித்து வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாப்பயணிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஒரே நாளில் 200 பேர் மீது வழக்குப்பதிவு - திருச்சி காவல் ஆணையர் ஆதங்கம்