ETV Bharat / state

குன்னூர் தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 7.81 கோடி மானியம்!

author img

By

Published : Apr 18, 2020, 11:11 AM IST

Updated : Apr 18, 2020, 11:48 AM IST

நீலகிரி: குன்னூர் தேயிலை விவசாயிகளுக்கு ரூபாய் 7.81 கோடி மதிப்பிலான மானியத்தை குன்னூர் மண்டல, இந்திய தேயிலை வாரியம் அளித்துள்ளது.

kunnoor tea board helping employees
kunnoor tea board helping employees

இந்திய தேயிலை வாரியம், குன்னூர் மண்டல அலுவலகம் பல்வேறு வகையான மானியங்களை தேயிலை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த மானியங்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை விவசாயிகளின் மேம்பாட்டிற்காகவும், சாகுபடி செய்யப்படும் தேயிலை தோட்டத்தில் தொடர்ந்து தரமான பசுந்தேயிலையை உற்பத்தி செய்து தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்வதற்கும், ஆர்தடக்ஸ் ரகத் தேயிலை தூள் தயாரிப்பை ஊக்குவிக்கவும், இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் தரமான தேயிலை தூளுக்கு சராசரி விலை கிடைப்பதற்கும் உறுதுணையாக செயல்படுகிறது.

இதன் ஒருபகுதியாக ரூ. 4.46 கோடி மதிப்பிலான மானியத்தை 1,344 பயனாளிகளுக்கு வழங்கியிருக்கிறது. கோவிட்-19 நோயால் தற்போது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு சிறு, குறு விவசாயிகளுக்கு கீழ்க்கண்ட கூடுதலான மானியங்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

தேயிலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புனரமைப்பு, கவாத்து, தேயிலை மறு நடவு ஆகிய செயல்பாடுகளுக்கு 716 சிறு விவசாயிகளுக்கு ரூ.15.8 லட்சமும், மனித வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 449 தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.92.10 லட்சமும், 9 பெரிய தேயிலை தோட்டங்களுக்கு கவாத்து, தேயிலை மறு நடவு, அறுவடை இயந்திரங்கள் ஆகியன கொள்முதல் செய்ததற்கு ரூ.40.38 லட்சமும் வழங்கப்பட்டது.

குன்னூர் தேயிலை விவசாயிகளுக்கு ரூ. 7.81 கோடி மதிப்பிலான மானியம்!

இதில் 33 சிறு விவசாயிகளுக்கு கவாத்து, புதுநடவு, நீர்ப்பாசனத்திற்கு ரூ.6.70 லட்சமும், மனிதவ ளமேம்பாட்டு திட்டத்தின் கீழ் 83 தேயிலை தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.13.05 லட்சமும், 8 பழங்குடியின தேயிலை தொழில் சார்ந்த பிரிவினருக்கு (TASP) ரூ.8.92 லட்சமும் வழங்கபட்டது.

தேயிலை நடவுக்கு ரூ.1.50 லட்சமும், எவரெஸ்ட் சுய உதவிக் குழுவிற்கு ரூபாய் மூன்று லட்சம் என மொத்தமாக மார்ச் 2020இல் குன்னூர் மண்டல இந்திய தேயிலை வாரியம் ரூ. 7.81 கோடி மதிப்பிலான மானியத்தை 2,718 பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.

Last Updated : Apr 18, 2020, 11:48 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.