நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தற்போது பகல் வேலையில் சூரியனின் கடும் வெப்பம் காரணமாக வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராமத்திற்குள் வருவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த சில நாள்களாக இரண்டு குட்டிகளுடன் தாய் கரடி ஒன்று வனப்பகுதிக்குள் செல்லாமல் கோத்தகிரி அருகேயுள்ள அலக்கரை கிராமம் உள்பட அருகில் உள்ள பல்வேறு கிராமங்களுக்குள் சுற்றித்திரிகிறது.
இந்நிலையில், இந்தக் கரடிகள் கீரக்கல் கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் சென்றது. இதனால், அப்பகுதி மக்கள் தேயிலை பறிக்க செல்லாமல் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் குட்டிகளுடன் சுற்றித்திரியும் கரடிகள் மனிதர்களைத் தாக்கும் முன்பு வனத்துறையினர் கரடிகளைக் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 17 வயதில் எட்டு குட்டிகளை ஈன்றெடுத்த பாண்டா கரடி!