நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் சமீபகாலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக குடியிருப்புப் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களிலும் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
இந்நிலையில், கோத்தகிரி பாண்டியன் பாா்க் அருகே உள்ள ரேஷன் கடையில் நேற்று காலை சன்னல் வழியாக புகுந்த கரடி, அங்கிருந்த அரிசி, பாமாயில் பாக்கெட்டுகளை சேதப்படுத்தியுள்ளது. தகவலறிந்த அங்கு வந்த வனத்துறையினா் அப்பகுதியில் முகாமிட்டு, கரடி உள்ளே செல்லாதவாறு கடையின் சன்னலை அடைத்தனா்.
ஆனால், இன்று அதிகாலை மீண்டும் அந்தப் பகுதிக்கு வந்த கரடி, சன்னல் வழியாக உள்ளே நுழையமுடியாததால், சாமர்த்தியமாக கடையின் ஷெட்டா் அருகே பள்ளம் தோண்டி உள்ளே சென்று பொருள்களை உண்டுவிட்டு சாவகாசமாக வெளியேறியது. இதனால் அச்சமடைந்துள்ள ரேஷன் கடை ஊழியர்கள் அட்டகாசம் செய்யும் கரடியைக் கூண்டுவைத்து பிடிக்கவேண்டும் என வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : ஒடிசாவில் பெண் செய்தியாளரைத் தாக்கிய வணிக வளாக ஊழியர்கள் கைது