ETV Bharat / state

கொடநாடு கொலை வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு - கொடநாடு விவகார வழக்கு

உதகை: கொடநாடு கொலை-கொள்ளை குறித்த வழக்கு விசாரணை வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Sayan investigation
author img

By

Published : Mar 27, 2019, 5:48 PM IST

கொடநாடு கொலை-கொள்ளை சம்பந்தப்பட்ட வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று நீதிபதி வடமலை முன் விசாரணைக்கு வந்தது. இதில் சயான் உள்ளிட்ட 10 பேர் இந்த வழக்கில் நேரில் ஆஜராகினர்.

அப்போது, விசாரணை நடத்திய நீதிபதி வழக்கை அடுத்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், சயான், வாளையாறு மனோஜ், தீபு, மனோஜ்சாமி, பிஜின்குட்டி ஆகிய 5 பேரின் நீதிமன்றக் காவலை அடுத்த வழக்கு விசாரணை வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனிடையே, சில நாள்களுக்கு முன்பு சயான் மீது கோத்தகிரி காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். அது குறித்து தனது வழக்கறிஞடன் பேச அனுமதிக்குமாறு அனுமதிக்கோரினார். அதற்கு நீதிபதி அனுமதி வழங்கியதையடுத்து சயான் வழக்கறிஞரிடம் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.