ETV Bharat / state

கொடநாடு கொலை வழக்கு: டிச. 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - kodanad bagala murder case

நீலகிரி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kodanad estate murder case postponed
author img

By

Published : Nov 8, 2019, 10:00 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவிற்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் மீது கோத்தகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இது குறித்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் உட்பட 10 பேர் நேரில் ஆஜராகினர்.

கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கருதி கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, உதயக்குமார், மனோஜ்சமி, ஜித்தின்ஜாய், சந்தோஷ்சாமி, ஜம்சீர்அலி, சதீசன் ஆகியோர் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டியதையும், பங்களா காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததையும் முக்கிய குற்றசாட்டாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

குற்றவாளிகளை அழைத்துச் செல்லும் காவலர்கள்

மேலும், 200 கோடி ரூபாய் பணம் இல்லாததால் பங்களாவில் இருந்த 10 கைக்கடிகாரங்கள், 42 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கிரிஸ்டல் காண்டாமிருக பொம்மை ஆகியவற்றை எடுத்துச் சென்றது உட்பட மொத்தம் 13 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யபட்டன. இதையடுத்து, வழக்கின் விசாரணை அடுத்த மாதம் இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும், அன்றைய தினம் சாட்சிகள் விசாரணை நடைபெறும் என்றும் கூறி நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: 'உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' - கொடநாடு குற்றவாளி கதறல்!

Intro:OotyBody:உதகை 08-11-19

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் பணம் இருப்பதாக கருதி சயான் உள்ளிட்டோர் கொலை மற்றும் கொள்ளை சம்பவம். அடுத்த மாதம் 02-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு. அன்றைய தினம் சாட்சி விசாரணை தொடங்கவுள்ளது.

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிலதாவிற்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உள்பட 11 பேர் மீது கோத்தகிரி போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இது குறித்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் உள்பட 10 பேர் நேரில் ஆஜராகினர். ஏற்கனவே கொடநாடு பங்களாவில் 200 கோடி பணம் இருப்பதாக கருதி கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, உதயக்குமார், மனோஜ்சமி, ஜித்தின்ஜாய், சந்தோஷ்சாமி, ஜம்சீர்அலி, சதீசன் ஆகியோர் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியதாகவும், கொள்ளை அடிக்க சென்ற போது ஓம்பகதூர் கொலை செய்யபட்டதாகவும் முக்கிய குற்றசாட்டாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது. மேலும் 200 கோடி பணம் இல்லாததால் பங்களாவில் இருந்த 10 கை கடிகாரங்கள் மற்றும் 42 ஆயிரம் மதிப்பிலான கிரிஸ்டல் காண்டாமிருக பொம்மையை எடுத்து சென்று உள்பட மொத்தம் 13 குற்றசாட்டுகள் பதிவு செய்யபட்டது. இன்று வழக்கு விசாரணையடுத்து அடுத்த மாதம் 02-ம் தேதிக்கு ஒத்தி வைக்கபடுவதாகவும், அன்றைய தினம் சாட்சிகள் விசாரணை நடைபெறும் என நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.