ETV Bharat / state

கொடநாடு வழக்கின் விசாரணை மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைப்பு! - KodaNadu case adjourned to March twenty one

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணையை உதகை மாவட்ட நீதிமன்றம் மார்ச் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

கொடநாடு வழக்கின் விசாரணை மார்ச் 21-ம் தேதி ஒத்திவைப்பு!

author img

By

Published : Feb 24, 2023, 3:17 PM IST

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வரும் நிலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று(பிப்.24) நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோரும் சிபிசிஐடி, ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசாரும் ஆஜரானார்கள்.

பின்னர், வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் வாளையார் மனோஜ் மட்டும் ஆஜரான நிலையில் தற்போதைய வழக்கு விசாரணை குறித்து அரசு தரப்பில் நீதிபதியிடம் கூறப்பட்டது. அதில் இதுவரை 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், அதேபோல் செல்போன் அழைப்புகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதால் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. இதை கேட்ட நீதிபதி மார்ச் 21ஆம் தேதிக்கு இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:மேளதாளத்துடன் அரசுப் பள்ளிக்கு சீர் வழங்கிய கிராம மக்கள்.. புதுக்கோட்டை நெகிழ்ச்சி சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.