நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டேறி குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்தப்பகுதியைச் சுற்றிலும் தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவ்வப்போது காட்டெருமை இப்பகுதியில் உலா வரும். இந்தச் சூழலில் தேயிலைத் தோட்டத்திலிருந்து சுமார் 12 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் வருவதற்கு முன்பே ராஜநாகம் தேயிலைத் தோட்டத்திற்குள் திரும்பச் சென்றுவிட்டது.
ராஜநாகம் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். மேலும், தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த இந்த ராஜநாகத்தைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆத்தாடி... இம்பூட்டு நீளமா... ஆம்பூரில் பிடிபட்ட 9 அடி நீள மலைப்பாம்பு!