ETV Bharat / state

'சிக்கிம் போல் நீலகிரியிலும் மக்கள் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும்' - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்! - kal iayaka thalaivar nallasamy said nilgiri people do natural farming

நீலகிரி: சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல் தற்போது தமிழ்நாடு அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் எனத் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

nalla
நல்லசாமி
author img

By

Published : Dec 16, 2019, 2:36 PM IST

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், 'செயற்கை முறையில் விவசாயம் செய்கையில், அதிக பூஞ்சானக் கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்படும் காய்கறிகளை மக்கள் உண்பதால் பல்வேறு நோய் உபாதைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.

சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல், தற்போது தமிழ்நாடு அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.

கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி

இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு தனி விலையைக் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது மட்டுமே இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அதிக அளவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவார்கள். மேலும், மக்கள் வெங்காயத்தை உபயோகிப்பதை சிறிது நாட்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களும், வரத் துடிக்கின்ற நடிகர்களும் 2021ஆம் ஆண்டில் கள் இயக்கத்துடன் வாதிட்டு கள் தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதை பொருள் தான் என நிரூபித்து விட்டால், அவர்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்' இவ்வாறு தெரிவித்தார்.

இதையும் படிங்க: முல்லை நகர் மயான பூமியில் எரிவாயு இயந்திரம் பழுது: மாற்று இடத்தை பயன்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்!

Intro:OotyBody:உதகை 14-12-19

சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல் தற்போது தமிழக அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருக்கிறது இதை கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...

செயற்கை முறையில் விவசாயம் செய்வதனால் அதிக பூஞ்சானக் கொல்லி மருந்துகள் மூலம் விளைவிக்கப்படும் காய்கறிகளை உண்பதால் நமக்கு பல்வேறு நோய் உபாதைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
அதனால் இயற்கை விவசாயத்தை அதிக அளவில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர்
இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு ஆனது தனி விலைலையை கொடுக்க முன்வர வேண்டும் அப்போது மட்டுமே இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அதிக அளவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவர் என கூறினார்.
தற்பொழுது வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டுள்ள நிலையில் குறுகிய கால சாகுபடியாக வெங்காயம் இருந்து வருகிறது சரியான விலை கிடைக்காத பொழுது விவசாயிகள் அதை சமாளித்து வந்தனர் ஆனால் தற்பொழுது இறக்குமதி செய்யும் அளவிற்கு வெங்காயம் இருந்து வருகிறது என தெரிவித்தார்.
மேலும் இன்று அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களும் வர துடிக்கின்ற நடிகர்களும் 2021 ஆம் ஆண்டில் கள் இயக்கத்துடன் வாதிட்டு கள் தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதை பொருள் தான் என நிருபித்து விட்டால் அவர்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்குமென தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதகையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பேட்டி: நல்லசாமி (தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர்)Conclusion:Ooty

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.