மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தை 1819ஆம் ஆண்டு வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜான் சலிவன். இதனைத் தொடர்ந்து அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் உள்ளிட்டவை காரணமாக உதகை சிறந்த சுற்றுலாத் தலமாக திகழ்கிறது.
1788ஆம் ஆண்டு ஜீன் 15ஆம் நாள் லண்டனில் பிறந்தவர் ஜான் சலிவன். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஈஸ்ட் இந்திய கம்பெனியில் சிவில் சர்வீசில் பணிபுரிந்த அவர், 1814ஆம் ஆண்டு செங்கல்பட்டு கலெக்டராக பணியாற்றினார். அப்போது, 1815ஆம் ஆண்டு கோவை மாகாண கலெக்டராக மாற்றப்பட்டார். 1821ஆம் ஆண்டு குதிரையின் மூலம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கண்ணேரி மூக்கு பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கு தங்குவதற்காக முதல்முதலில் கட்டடம் ஒன்றையும் கட்டினார்.
அதில் தங்கி ஜான் சலிவன் நீலகிரி மாவட்டம் முழுவதையும் கண்டுபிடித்ததுடன் வெளி உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்தார். நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்ட அவர் 1856ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். முதல்முதலாக நீலகிரி மாவட்டத்தை கண்டுபிடித்து வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதால் ஜான் சலிவனை நீலகிரி மாவட்டத்தின் தந்தை என அழைக்கபட்டுவருகிறார்.
இந்நிலையில், இன்று (ஜூன் -15) ஜான் சலிவனின் 232ஆவது பிறந்த நாள் என்பதனால் கோத்தகிரி அருகே கண்ணேரி மூக்கு பகுதியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதேபோன்று, அவரது ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இப்போதைய அரசு கல்லூரியிலும் முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். தற்போது இந்தக் கட்டடம் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பில் பழமை மாறாமல் புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்சி மாணவர்கள் பொதுத்தேர்வு: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கு திருச்சி சிவா கடிதம்