நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் தொடங்கிது. எனவே குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை பாதையில் பலாப் பழம் சீசனாது களை கட்டியுள்ளது. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் மூன்றுக்கும் மேற்பட்ட குழுக்களாக பிரிந்து பலா பழங்களை ருசித்து உண்டு வருகின்றன.
மலை ரயில் பாதையிலும், ஆதிவாசி கிராமங்களிலும், சாலையோரங்களிலும் முகாமிட்டுள்ள இந்த யானைகள் அவ்வப்போது சாலையை கடப்பதினால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் மரப்பாலம் அருகே குட்டியுடன் காட்டு யானைகள் சாலையில் உலா வரும். எனவே சாலையோரங்களில் பலா பழங்கள் விற்க வனத்துறை தடை விதித்தது. ஆனால் வியாபாரிகள் அதனை பெருட்படுத்தாமல் சாலையோரங்களில் பலா பழங்களை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் யானைகள் இவர்களை தாக்கும் அபாயம் உள்ளது.
அதுபோல காட்டு யானைகள் அடிக்கடி சாலையை கடப்பதால் வாகனங்களை எச்சரிக்கையுடன் ஓட்டுநர்கள் இயக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நுரையீரலில் ஏற்பட்ட நோய்த்தொற்றால் காட்டு மாடு உயிரிழப்பு