ETV Bharat / state

மலைப்பாதையில் அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி - சசிமோகன் - Vehicles will be allowed on the Kallati hill

உதகை: நீலகிரியில் உள்ள கல்லட்டி மலைப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல விரைவில் அனுமதிக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பேட்டி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பேட்டி
author img

By

Published : Nov 27, 2019, 6:29 PM IST

நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகளில் கட்டடம் கட்டவும், கல்லட்டி மலைப்பாதையில் வாகனங்கள் செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், தடைகளை நீக்கக்கோரி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை முழு கடை அடைப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டங்கள் நடைபெற உள்ளன.

இந்த போராட்டங்களை கைவிடக் கோரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தலைமையில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் சந்தித்தார். அப்போது, 'கல்லட்டி மலைபாதையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது' என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் பேட்டி

மேலும், 'வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் மலைப்பாதையில் அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கல்லட்டி மலைபாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்படும்' என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: நெல்லையில் காவல் துறை வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

Intro:OotyBody:உதகை                                 27-11-19
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கல்லட்டி மலைபாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல விரைவில் அனுமதிக்கபடும் என நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் தெரிவித்துள்ளார்…
    நீலகிரி மாவட்டத்தில் 283 பகுதிகளில் கட்டிடம் கட்டவும், கல்லட்டி மலைபாதையில் வாகனங்கள் செல்லவும் நீலகிரி மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கபட்டு வருகின்றனர். இதனையடுத்து தடைகளை நீக்க கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பாக நாளை நீலகிரி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தை கைவிட கோரி உதகையில் மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசன்ட் திவ்யா முன்னிலையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உடன்பாடு எட்டபடாத நிலையில்  மாவட்ட ஆட்சிதலவைர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 283 இடங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ளதாக புவியல் துறை அறிவித்துள்ளது. அதன் படி தான் தற்போது தடைவிதிக்கபட்டுள்ளது என்றார். இது பொதுமக்களின் நலன் கருதி எடுக்கபட்ட முடிவு என்று தெரிவித்தார்.
   அவரை தொடர்ந்து பேசிய நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிசமோகன்: கல்லட்டி மலைபாதையில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து காரணமாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கபட்டுள்ளதாகவும், உள்ளுர் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கபட்டு வருவதாகவும் கூறினார். மேலும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் அனுமதிப்பது குறித்து ஆய்வு செய்யபட்டுள்ளதாக தெரிவித்த சசிமோகன் தேவையான பாதூப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு ஒரு மாத காலத்திற்கு பின்னர் கல்லட்டி மலைபாதையில் அனைத்து வாகனங்களும் அனுமதிக்கபடும் என்றார்.
பேட்டி: சசிமோகன் - மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்.
  Conclusion:Ooty

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.