நீலகிரி: தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் பகுதியில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.
பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (அக்.17) பந்தலூர், கூடலூர் பகுதிகளில் அதிகமான மழை பெய்துள்ளது. பந்தலூரில் 94 மி.மீ மழையும், கூடலூரில் 61 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பந்தலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கு 77 தற்காலிக தங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மழை தொடர்ந்தால் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கனமழைக்கு வாய்ப்பு