ETV Bharat / state

காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் காட்டு யானையை முகாமில் வைத்து பராமரிக்க திட்டம்! - தும்பிக்கையில் ஏற்பட்ட காயம்

தும்பிக்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் காட்டு யானையை வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடாமல், யானைகள் முகாமிலேயே வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர்

author img

By

Published : Jul 1, 2021, 11:31 AM IST

நீலகிரி: உதகமண்டலம் அருகேவுள்ள மாவனல்லா உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்து வந்தது. இந்த யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக சுமார் அரை அடிக்கு அதன் தும்பிக்கை துண்டாகியது.

யானையை காட்டுக்குள் விடக்கோரி மனு

முன்னதாக அதன் காயங்கள் குணமான நிலையிலும் மற்ற யானைகளைப் போல தனது தும்பிக்கையை பயன்படுத்தி உணவு உட்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அந்த யானை தொடர்ந்து குடியிருப்பு, விவசாய நிலங்களில் புகுந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால், அப்பகுதி கிராம மக்கள் அந்த யானையை பிடிக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து கடந்த மே மாதம் யானை கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது. இந்நிலையில், 50 நாள்களுக்கு மேலாக மரக்கூண்டில் உள்ள ரிவால்டோ யானையை மீண்டும் வனப் பகுதியில் விட வேண்டும் என விலங்குகள் உரிமை ஆதரவாளர் மேனகா காந்தி தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தார்.

யானையை முகாமில் வைத்து பராமரிக்க திட்டம்

இதனையடுத்து அந்த யானையை தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் நேரில் ஆய்வு செய்து கூண்டில் வைக்கபட்டுள்ளதற்கான காரணத்தை வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கண்ணில் ஏற்பட்ட காயத்தால் தவித்து வந்த சேரன் யானையை பார்வையிட்டார்.

செய்தியாளர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், “ரிவால்டோ யானையின் தும்பிக்கையில் ஏற்பட்ட காயத்தால் நிரந்தர குறைபாடு ஏற்பட்டு, மற்ற யானைகளைப் போல உணவு உட்கொள்ள அதனால் முடியவில்லை. அதனை காட்டுப்பகுதிக்குள் விட்டால் மீண்டும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் சுற்றி வரும். எனவே இந்த யானையை முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் வைத்து பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: யானை தாக்குதல் - தப்பிய முதியவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.