நீலகிரி: குன்னூர் அரவங்காடு அருகே பாலாஜி நகர்ப் பகுதியில் சுதந்திர போராட்ட வீரரான தியாகி கங்காதரன் வீடு உள்ளது. இவரின் வீட்டின் முன்பு ஓய்வுபெற்ற கர்னல் பாண்டியராஜன் தலைமையில் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இதில் தியாகியின் மகளான பேராசிரியை செல்வநாயகி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தனது தந்தையின் நினைவுகளை எடுத்துரைத்தார். இதனைத்தொடர்ந்து தியாகி கங்காதரனின் மகள்கள், மகன்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வரலாற்றை காட்சிப்படுத்திய தமிழ் படங்கள்!