நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருகிறது. நாள்தோறும் 50-க்கும் குறைவாக கரோனா தொற்று உறுதிசெய்யபபடுகிறது. அதன் காரணமாக, நீலகிரிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகைதருகின்றனர்.
குறிப்பாக குன்னூர் பர்லியார் சோதனைச்சாவடி வழியாகச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கரோனா தொற்று பரிசோதனை எடுப்பதில்லை. ஆன்லைனில், நட்சத்திர விடுதிகளில் அறைகளை முன்பதிவு செய்துவிடுகின்றனர்.
பூங்காக்கள் மூடப்பட்டாலும் விடுதி, காட்டேஜ்களில் சுற்றுலாப் பயணிகள் கூட்டமாகக் கூடுகின்றனர். இதன் காரணமாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பர்லியார் சோதனைச்சாவடியில் கட்டாயம் கரோனா தொற்று பரிசோதனை செய்வதுடன், கண்காணிப்புப் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலில் படகு சவாரிக்கு அனுமதிக்க கோரிக்கை