ETV Bharat / state

நீலகிரியில் மிருகங்களை காண குவியும் சுற்றுலா பயணிகள் - நீலகிரி மிருகங்கள்

நீலகிரி: முதுமலை சரணாலயத்தில் ஒரே நேரத்தில் யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட மிருகங்களை கண்டதில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரியில் மிருகங்களை காண குவியும் சுற்றுலா பயணிகள்
author img

By

Published : May 26, 2019, 11:36 PM IST

நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்குள்ள பூங்காக்களிலும், படகு இல்லத்தில் படகு சவாரியிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். முதுமலை சரணாலயத்தில் யானை சவாரி, வாகன சவாரி செய்ய சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் வனப்பகுதிக்கு பசுமை திரும்பியுள்ளது. இதனால் இங்கு இடம் பெயர்ந்த யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள் உள்ளிட்ட வனலிலங்குகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பல விலங்குகளை ஒரே சமயத்தில் கண்டதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரியில் மிருகங்களை காணக் குவியும் சுற்றுலா பயணிகள்

உதகை            26-05-19
    ஒரே சமயத்தில் சுற்றுலா பயணிகள் பார்வைக்கு கிடைத்த  யானை, சிறுத்தை, கரடி காட்டெருமை, மான்கள். இதனை கண்டு  சுற்றுலா பயணிகள் பரவசம்.
 
நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் என்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். உதகை வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்கள், படகு இல்லத்தில் படகு சவாரி செய்வது வழக்கம். மேலும் முதுமலை புலிகள் சரணாலயம் சென்று வனவிலங்குகள் காணவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.  முதுமலை சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி மற்றும் வாகன சவாரி செய்வது வழக்கம். இங்கு யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள் உள்ளிட்ட  வனலிலங்குகள் காணபடுகின்றன. கடந்த சில  நாட்களாக பெய்த கன மழையால் வன பகுதி பசுமை திரும்பியுள்ளது. இதனால் இடம் பெயர்ந்த வன  விலங்குகள் தற்போது முதுமலை சரணாலய பகுதிக்கு வர துவங்கியுள்ளன.  இந்நிலையில் சுற்றுலா பயணிகள்  வனத்துறை வாகனத்தில்  வாகன  சவாரி செய்யும் போது யாரும் எதிர்பார்க்காத வகையில் வனப்பகுதியொட்டி உள்ள சாலையோரத்தில் முதலில் தென்பட்டது 100ற்கும் மேற்பட்ட  மான்கள்  கூட்டம், பிறகு கூட்டமாக மிரட்டும் வகையில் இருந்த காட்டெருமைகள், இதனை கண்டு போதும் மிகவும் மகிழ்ச்சி என மனதிற்குள் நினைக்கும் சமயத்தில் அவர்களின் கண்களுக்கு தென்பட்டவை யானை கூட்டம். மேலும் அனைவருக்கும் எளிதில் காணகிடைக்காத சிறுத்தை ஒன்று மரத்தில் சுற்றுலா பயணிகளை கண்டவாறு அமர்ந்திருந்தது. மேலும் சுற்றுலா பயணிகளின் அதிர்ஷ்டம் வீணாகவில்லை, கரடி ஒன்று யாரையும் பொருட்படுத்தாமல் அங்கும், இங்குமாக சென்றது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் ஒரே சமயத்தில் இவ்வளவு விலங்குகளை காணவில்லை எனவும், இப்படி காணவேண்டும் என்றால் விலங்குகள் காட்சியகம் தான் செல்ல வேண்டும் என தெரிவித்தனர். ஒரே சமயத்தில் பல விலங்குகளை கண்டது சுற்றுலா பயணிகளின் அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். சுற்றுலா பயணிகள் கண்களில் மட்டும் காணாமல் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.