நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பிருந்தாவன் அருகே நோயாளிகளை அழைத்துச் செல்ல வந்த 108 ஆம்புலன்ஸ் நிலை தடுமாறி அருகில் இருந்த ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் சந்தீப் படுகாயமடைந்து குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ்கள் பராமரிப்பின்றியும், தரமின்றியும் இருப்பதாலேயே விபத்துகள் நேர்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் மூன்றுக்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.