நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள அய்யன்கொல்லி குடியிருப்பு பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று மக்களை அச்சுறுத்துவது மட்டுமின்றி, அவர்களைத் தாக்கியும் வருகிறது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த காட்டு யானையின் அட்டகாசங்களைத் தாங்க முடியாத மக்கள், காட்டு யானையின் அச்சுறுத்தல் குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து, மக்களை அச்சுறுத்தி அட்டகாசம் செய்து வரும் யானையை வனத்துறையினர் தங்களின் வாகனம் மூலமாகவும், பட்டாசுகள் வெடித்தும் வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.