ETV Bharat / state

பனிப்பொழிவால் தேயிலை விளைச்சல் பாதிப்பு! - தேயிலை விளைச்சல்

நீலகிரி: பனிப்பொழிவால் தேயிலை விளைச்சல் பாதிக்கப்பட்டு இலை கொள்முதல் சரிந்துள்ளது.

tea
tea
author img

By

Published : Feb 16, 2021, 6:22 PM IST

நீலகிரியில் 60 ஆயிரம் ஏக்கரில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. கடந்த, 10 ஆண்டுகளை காட்டிலும், கடந்தாண்டில், பரவலாக பெய்த மழையால், கூட்டுறவு தொழிற்சாலைகளில் இலை கொள்முதல் 6 கோடி கிலோவை எட்டியது. டிசம்பர் இறுதி வரை தினசரி சராசரியாக 25 ஆயிரம் கிலோ இலை கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது உறைப் பனிப்பொழிவு காரணமாக, தேயிலை தோட்டங்களில் இலைகள் கருகி விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து படிப்படியாக குறைந்து காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில், தினசரி 5 ஆயிரம் கிலோ மட்டுமே இலை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உறைப் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தேயிலை கொள்முதல் குறைய வாய்ப்புள்ளது.

பனிப்பொழிவால் தேயிலை விளைச்சல் பாதிப்பு

இதனால் மொத்தமுள்ள, 16 கூட்டுறவு தொழிற்சாலைகளில், கொள்முதல் குறைவாக உள்ள தொழிற்சாலைகளில், செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்று நாட்களுக்கு ஒரு நாள் உற்பத்தி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சுழற்சி முறையில் நாள் ஒன்றுக்கு மூன்று ஷிப்ட் உற்பத்தியானது தற்போது , ஒரு 'ஷிப்ட்' ஆக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமே பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போன ஒரு கிலோ தேயிலைத் தூள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.