ETV Bharat / state

நீலகிரியில் அடர்ந்த பனிமூட்டம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

நீலகிரி: குன்னூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் நிலவுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Aug 7, 2019, 12:43 PM IST

nilgiris

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியில், இரண்டு நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவிவருகிறது. பகல் நேரங்களிலும் பனிமூட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள், தங்கள் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருந்து மலைப் பாதையில் பயணம் மேற்கொள்கின்றனர்.

அடர்ந்த பனிமூட்டத்தில் நீலகிரி
அதனுடன் குன்னூர், கோத்தகிரி சாலைகளில் காணப்படும் அதிகமான பனிமூட்டத்தால், பகல் நேரங்களிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி செல்கின்றன.
தொடர்ந்து பெய்துவரும் மழை, கடும் பனி மூட்டம் காரணமாக அங்கு கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பனிமூட்டத்தால் இயற்கை எழிலைக் கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Intro:அடர்ந்த பனியின் பிடியில்  குன்னூர் பகுதிகள். பொதுமக்கள் இயல்நிலை பெரிதும் பாதிப்பு....

இயற்கை எழில் கொஞ்சும் மலை மாவட்டமான நீலகிரியில், கடந்த இரு நாட்களாக கடும் பனி மூட்டம் நிலவுகிறது. பகல் நேரங்களிலும் அதிக நேரம் பனிமூட்டம் காணப்படுவதால், சுற்றுலாப் பயணிகள், தங்கள் வாகனங்களில் நீண்ட நேரம் காத்திருந்து மலைப் பாதையில் பயணம் மேற்கொள்கின்றனர். 

குன்னூர், கோத்தகிரி சாலைகளில் பனி மூட்டம் அதிகமாக காணப்பட்டதால், பகல் நேரங்களிலேயே வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டப்படி சென்றன. 
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கடும் பனி மூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனி மூட்டம் இருந்தது.
நேற்று மழை மற்றும் கடுங்குளிர் காரணமாக  பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எடக்காடு, தாய்சோலை,  கடும் மேகமுட்டம் நிலவுகிறது நீலகிரி மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவுகிறது.

பனிமூட்டத்தால் இயற்கை எழிலை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். எனினும், இந்த இதமான காலநிலை தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Body:அடர்ந்த பனியின் பிடியில்  குன்னூர் பகுதிகள். பொதுமக்கள் இயல்நிலை பெரிதும் பாதிப்பு....

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.