நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ளது கோல்டன் அவன்யு. இங்கு 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் கூடலூர் பகுதியில் பெய்த கன மழையில், அப்பகுதிக்குச் செல்ல கூடிய பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆட்சியர் உத்தரவு
அப்போது, கூடலூர் வருகை தந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அந்தப் பாலத்தை அமைத்துத்தர நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆனால், 5 மாத காலமாக நகராட்சி அலுவலர்கள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல் புறக்கணிப்பு
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், " 60 குடும்பங்களும் ஐந்து மாத காலமாக தங்களின் வீடுகளுக்கு வாகனத்தில் செல்ல முடியாமல், நகரப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம்.
இந்தப் பாலம் இல்லாததால் தங்கள் வாகனங்கள் முழுவதும் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் கூடலூர், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் பாதுகாப்பு இல்லாமல் நிறுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக பாலம் அமைத்து தர வேண்டும். இல்லையெனில் வரும் சட்டப் பேரவை தேர்தலைப் புறக்கணிக்கபோம்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இடிந்து விழுந்த பாலம்- சிக்கலில் பொதுமக்கள்!