குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் பசுமை திரும்பியுள்ளது. இதனால் காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து கேஎன்ஆர் வனப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய யானைகள் சாலைகளில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
அவ்வப்போது, சாலைகளில் இரண்டு சக்கர வாகனங்களில் வருவோர்களையும் யானைக்கூட்டம் விரட்டி வருகிறது. சாலைகளில் யானைகள் கூட்டமாகக் கடந்து செல்வதால், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்திற்குள்ளாகின்றனர்.
மேலும், இதுபோன்று யானைகள் கூட்டமாகச் செல்லும் போது, சுற்றுலாப்பயணிகள் ஆபத்தை உணர்ந்து புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என வனத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: கவுண்டம்பாளையத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளை!