நீலகிரி மாவட்டத்தில் 2017-18, 2018-19ஆம் கல்வியாண்டுகளில் 10 ஆயிரத்து 251 மாணவ, மாணவியர்களுக்கு மூன்று கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
நடப்பாண்டில் நான்காயிரத்து 910 மாணவ, மாணவியருக்கு ஒரு கோடியே 93 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.
இந்நிலையில், நேற்று உதகையில் உள்ள பெத்லேகம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மதிவண்டி மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினார். நேற்று மட்டும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் ஆயிரத்து 92 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அ. நாசருதீன், உதகை, குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரிய ஆசிரியைகள், அரசுத் துறை அலுவலர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கிய துணை சபாநாயகர்