நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியது. பூங்காவில் 21 அரங்குகள் அமைக்கப்பட்டு அரிய வகை பழங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒன்றரை டன் சாத்துக்குடி, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களைக் கொண்டு வண்ணத்துப்பூச்சி, மயில் உள்ளிட்ட உருவங்களும் வடிவமைக்கப்பட உள்ளது.
இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். பழக்கண்காட்சியை ஒட்டி இரண்டரை லட்சம் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டன. அதில் பால் சம், சால்வியா, மெரி கோல்டு, பெக்கோனியா, பிளாக்ஸ், பேன்சி, டெல் பீனியம் உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வகைகள் பூத்துக் குலுங்குகின்றன.
அதேபோல், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பூங்கா பண்னையில் மலர் நாற்றுக்கள் பசுமை குடிலில் நடவு செய்யப்பட்டு மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரக்கூடும் என்பதற்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.