நீலகிரி மாவட்டத்தில் உதகை காந்தல் பகுதியில் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கரோனா பெருந்தொற்று குறித்த சோதனையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியிருக்கிறது. முதற்காட்டமாக 300 ரேபிட் கிட்கள் வந்துள்ளன.
மேலும் 9 பேர் கரோனா பாதிப்பால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதில் நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் 1417 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்ட நிலையில், 1364 பேருக்கு கரோனா பெருந்தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 53 பேர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: முன்பதிவுகள் ரத்து செய்யப்படுகின்றன: ஏர் இந்தியா