நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு நிறுவனத்தின் சார்பாக வனத் துறை அலுவலர்களுக்கு நீர் மேலாண்மை குறித்த சிறப்பு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. இதில், வனப்பகுதிகளில் தண்ணீர் சேமிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும் நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரா உள்ளிட் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 31 உதவி வனத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முதல் நாளான இன்று நீர்பிரி முகடு பகுதி மேலாண்மை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. 10 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமில் வனப்பகுதியில் களப்பயிற்சியும் அளிக்கப்படுகிறது. குறிப்பாக நீர்நிலைகள், மண் பாரமரிப்பு, ஓடைகள் பராமரிப்பு, கசிவுநீர் குட்டை அமைக்க இடம் தேர்வுசெய்தல், வடிவமைத்தல் குறித்த பயிற்சி வழங்கப்படும்.
இந்தப் பயிற்சியில் செயல்முறை விளக்கத்துடன் களப்பயிற்சியாக மண் மற்றும் நீர்வள கட்டமைப்பு ஆகியவற்றை வடிவமைத்தல். அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்தல் போன்றவைகளும் கற்றுத்தரப்படும். இதில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கௌசல், முனைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: