நீலகிரி: கூடலூர், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் மற்றும் நான்கு மனிதர்களை வேட்டையாடிய டி23 என்ற ஆட்கொல்லி புலியை பிடிக்கும் பணிகள், இன்று 11ஆவது நாளாக சிங்காரா வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
வனத்துறையினர் மேற்கொண்ட பல்வேறு கட்ட முயற்சிகள் தோல்வியடைந்ததையடுத்து இரவு நேரத்தில் புலியை கண்காணிக்கும் வகையில் வனப்பகுதிக்குள் மாடுகளை கட்டி வைத்தும், பரண் அமைத்தும் அதில் வனத்துறையினரை அமர வைத்தும் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மசினகுடி சோதனைச் சாவடிக்கு வந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், புலியை பிடிக்கும் பணி குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
வலத்துறைக்கு அறிவுரை வழங்கிய அமைச்சர்
அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், புலியை பிடிப்பது தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் செய்தியாளர்களுக்கு எந்த ஒரு தகவல்களையும் தெரிவிப்பது இல்லை என புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, அங்கிருந்த வன அலுவலர்களிடம், நாள்தோறும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்களுக்கு தகவலளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: மனிதர்களை வேட்டையாடிய புலி - கிராம மக்களின் மனநிலை என்ன?