நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கிளண்டேல், நான்சச் போன்ற கிராமங்களுக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டங்களில் 2 குட்டியுடன் கூடிய 9 காட்டு யானைகள் கடந்த டிசம்பர் மாதம் 16ஆம் தேதியில் இருந்து முகாமிட்டிருந்தன. இந்நிலையில், அவற்றில் 5 யானைகள் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்குச் சென்றுவிட்டன.
இதனிடையே, நான்கு யானைகள் குன்னூர் நஞ்சப்பசத்திரம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நிறைந்த கிராமத்தை நோக்கி இன்று (ஜன.29) வந்துள்ளன. இந்த நான்கு யானைகளை மீண்டும் மேட்டுப்பாளையம் வனப்பகுதிக்கு விரட்ட 8 பேர் கொண்ட வனக்குழு தொடர்ந்து முயற்சி செய்து வந்தாலும், இவை இங்கிருந்து நகராமல் அருகில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று விடுகிறது.
எனவே, அவை இங்குள்ள குடியிருப்புகளுக்கு நுழையாமல் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த கிராமத்தில் முன்னாள் முப்படை தளபதியான பிபின் ராவத் (CDS BIPIN RAWAT) சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்த இங்கிலாந்து பயணிகள்!