ETV Bharat / state

வனப்பகுதியில் தாது உப்பு கட்டிகள் தூவும் பணி

நீலகிரி: வனத் துறையினர் முதுமலை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்கு தாது உப்பு கட்டிகள் தூவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தாது உப்பு கட்டிகள்
author img

By

Published : Jun 10, 2019, 2:31 PM IST

Updated : Jun 10, 2019, 7:26 PM IST

முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயமும், கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகமும் உள்ளது. தொடர்ச்சியாக அடர் வனப்பகுதி உள்ளதால் இது ஏராளமான வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இங்கு மான்கள், யானைகள், காட்டு எருமைகள் உள்ளிட்ட தாவர உண்ணி இனங்கள், பாலூட்டி இனங்கள் என ஏராளமாக காணப்படுகின்றன.

பொதுவாக இவை தங்களது உடலில் தாது உப்புக்கள், கனிமங்கள், வைட்டமின்களின் தேவைக்காக மண்ணில் உள்ள தாது உப்புக்களை இயற்கையாகவே தேடி சாப்பிடுவது வழக்கம். இதற்காக வனத் துறையினர் வனப்பகுதிகளில் வைட்டமின்கள், மினரல்கள் அடங்கிய உப்புக் கட்டிகளை போடுவது வழக்கம்.

வனப்பகுதியில் தாது உப்பு கட்டிகள் தூவும் பணி

இந்நிலையில், வனத் துறையினர் வனவிலங்குகளுக்குப் பயனளிக்கும் தாது உப்புக்கட்டிகளை முதுமலை புலிகள் காப்பகத்திலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்லும் பாதையிலும், நீர் நிலைகளிலும் தூவினர்.

நீர் நிலைகளிலும், முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் செல்லும் பாதையிலும் தூவப்படும் தாது உப்புக்களை வன விலங்குகள் உண்ணவரும்போது சுற்றுலாப் பயணிகள் வனவிலங்களை நேரடியாகப் பார்க்கும் சூழல் ஏற்படுவதால் மிகவும் மகிழ்ச்சியடைகின்றனர்.

உதகை         10-06-19
முதுமலை வனப்பகுதியில் உள்ள வன விலங்குகளுக்காக தாது உப்பு கட்டிகள் துவும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வன விலங்குகளின் ஜீரன சக்தியை அதிகரிக்கும் என நம்பிக்கை. 

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகம்  326 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.  முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளாவின் முத்தங்கா வனவிலங்கு சரணாலயம் மற்றும் கர்நாடகத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம் ஆகியவையும் உள்ளன.  தொடர்ச்சியான அடர் வனப் பகுதி என்பதால் இது ஏராளமான வன உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.   இங்கு மான்கள் யானை காட்டு எருமைகள் உள்ளிட்ட தாவர உண்ணி இனங்களும் பாலூட்டி இனங்களும் ஏராளமாக காணப்படுகின்றன.  பொதுவாக இவை தங்களது உடலில் தாது உப்புக்கள், மினரல்கள் மற்றும் விட்டமின்களின் பற்றாக்குறை  தேவைக்க்காக மண்னில் உள்ள தாது உப்புக்களை இயற்கையாகவே தேடி சாப்பிடுவது வாடிக்கை.  இதற்காக வனத்துறையினர் வனப்பகுதிகளில் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் அடங்கிய உப்புக் கட்டிகளை போடுவது வழக்கம். நீர் நிலைகளை ஒட்டி மன்னில் போடப்படும் உப்பை சாப்பிடும் வன விலங்குகள் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் அவற்றுக்கு ஏற்படும் தோல் நோய்கள் குறையும் என்றும்
     முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்லும் சுற்றுலா சோன் பகுதிகளை ஒட்டி உள்ள நீர் நிலைகளை ஒட்டி போடப்படும் உப்புக் கட்டிகளை சாப்பிட வரும் வன விலங்குகளை அந்தப் பகுதி வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள்  காண முடிகின்றது என்றும்  வன விலங்குகளின் உப்பு தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு  சுற்றுலா பயணிகளுக்கும் வனவிலங்குகளை பார்த்து  திருப்தி அடைந்து வரு வருவதாகவும் அத்துடன் உள்  வனப்பகுதிகளிலும் இந்த உப்பு கட்டிகள் போடும் பணிகள் நடைபெறும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த உப்பு போடுவதால் வனவிலங்குகளின் ஜீரன சக்தியை அதிகரிக்க முடியும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Last Updated : Jun 10, 2019, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.