தமிழ்நாட்டில் 50 விழுக்காட்டும் மேல் காடுகளால் சூழப்பட்டது நீலகிரி மாவட்டம். இங்கு தேக்கு, ஈட்டி, சந்தனம், பலா போன்ற விலை உயர்ந்த மரங்கள் விளையக் கூடியவை.
கோடையில் மலையைக் பாதுகாக்கவும், காடுகளைக் காப்பாற்றவும் குன்னூர் தீயணைப்பு நிலையத்தில், அலுவலர் மோகன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக குன்னூர் வனத்துறையினர் கலந்துகொண்டனர்.
இயற்கையை காப்பாற்றுவது, மரங்களை அழிப்பதால் மழை குறையும் அபாயம், வனங்களில் எற்படும் வனத்தீயை கட்டுபடுத்துவது, வனவிலங்குகளை காப்பது குறித்த விளக்க உரை கூட்டத்தில் வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளியில் விவசாயம் செய்யும் மாணவர்கள்; குவியும் பாராட்டுகள்!