ETV Bharat / state

ஊட்டியில் செங்காந்தள் மலர் சீசன் தொடக்கம்; சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு! - உதகை

உதகை: செங்காந்தள் மலர் நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது.

Flame lily
author img

By

Published : Aug 2, 2019, 3:50 PM IST

தமிழ்நாட்டின் மலர் என்றழைக்கபடும் செங்காந்தள் மலர் தற்போது நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் பூத்துக் குலுங்க தொடங்கியுள்ளது. இந்த மலர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பூத்துக் குலுங்கக்கூடிய தன்மை கொண்டவை.

குளோரியோசா சூப்பரப்பா என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செங்காந்தள் மலர் செடிகள் மருத்துவ குணம் கொண்டது. அதன் விதைகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கபடுகிறது. மருத்துவ குணம் இருப்பதால் சமவெளி பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் செங்காந்தள் செடிகளை சாகுபடியும் செய்து வருகின்றனர்.

ஊட்டியில் செங்காந்தள் மலர் சீசன் ஆரம்பம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரா, சீகூர், கெத்தை உள்ளிட்ட வனப்பகுதிகளில் உள்ள செங்காந்தள் செடிகளில் மலர்கள் பூத்துள்ளதை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

Intro:OotyBody:
உதகை 02-08-19
தமிழ்நாட்டின் மாநில மலர் என்றழைக்கபடும் செங்காந்தள் மலர்கள் தற்போது நீலகிரி மாவட்ட வனபகுதியில் பூத்து குலுங்க தொடங்கி உள்ளது. அதனை ஏராளமனோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்ட வனபகுதியில் சுமார் 2800 தாவர வகைகள் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. இந்த தாவரங்கள் குறிப்பிட்ட காலத்தில் பூத்து குலுங்கும் தன்மை கொண்டுள்ள நிலையில் தற்போது தமிழ்நாட்டின் மாநில மலர் என்று அழைக்கபடும் செங்காந்தள் மலர் சீசன் தொடங்கி உள்ளது. பொதுவாக ஆண்டுதோறும் ஜீன் மாத இறுதியில் பூத்து குலுங்கும் இந்த செடிகள் இந்த ஆண்டும் வழக்கம் போல பூக்க தொடங்கி உள்ளன. குளோரியோசா சூப்பரப்பா என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த செங்காந்தள் மலர் செடிகள் மருத்துவ குணம் கொண்டது.
குறிப்பாக அதன் விதைகளில் இருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் தயாரிக்கபடுகிறது. மருத்துவ குணம் இருப்பதால் சமவெளி பகுதிகளில் உள்ள சில விவசாயிகள் செங்காந்தள் செடிகளை சாகுபடியும் செய்து வருகின்றனர். இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிங்காரா, சீகூர், கெத்தை உள்ளிட்ட வனபகுதிகளில் உள்ள செங்காந்தள் செடிகளில் மலர்கள் பூத்துள்ளதை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர்.
Conclusion:Ooty
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.