நீலகிரி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் வறட்சி காரணமாக செடி, கொடிகள் காய்ந்து எளிதில் தீ பற்றும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் குன்னூர் அருகே உபதலைப் பகுதியில் வனத்துறையினருக்குச் சொந்தமான கற்பூரம் மரக்காட்டில் திடீரென தீ பற்றியது. இந்தத் தகவலறிந்து விரைந்த தீயணைப்புத் துறையினருக்கு, வனப்பகுதி என்பதால் வாகனம் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், துரிதமாக யோசித்த தீயணைப்புத் துறையினர், தீ தடுப்புக் கோடுகள் அமைத்து உடனடியாக செடி, கொடிகள் மீது பற்றிய தீயை சுமார் 5 மணி நேரம் போராடி அணைத்தனர்.
இருப்பினும் பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டில் ஒரு ஏக்கர் காடு தீயில் கருகியது.
மேலும், காட்டில் தீ வைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கொரோனா தாக்கம்: ஒரு வாழைப்பழத்திற்காக சாலையில் சண்டையிட்ட 100க்கும் மேற்பட்ட குரங்குகள்!