நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் நீலகிரி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் இருந்தும் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள். பேராசிரியர், உதவி பேராசிரியர், கௌரவ விரிவுரையாளர் என 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆங்கிலத் துறையில் பணியாற்றி வரும் பெண் உதவி பேராசிரியர் ஒருவர் அதே கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் தர்மலிங்கம் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகவும், அதனை வெளியில் தெரிவித்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
இந்த வழக்கு, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட தர்மலிங்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பல பிரச்சினைகள் உள்ளது என்றும் தனக்கு ஏற்பட்டது போல யாருக்கும் ஏற்படக் கூடாது என்றும் கல்லூரி முதல்வர் ஒரு சமூகத்தை சார்ந்தவர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படுகிறார் என்றும் பாதிக்கப்பட்ட பெண் உதவி பேராசிரியர் குற்றம் சாட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் மதிப்பெண் சதவீதம் குறைவு