நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 30). இவர் கே.எம்.எப் சாலையிலுள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கியுள்ளார். மது வாங்கிக் கொண்டு அதனை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்று அவர் திறந்து பார்த்தபோது, குப்பியில் நெகிழி கவர் ஒன்று கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இது குறித்து அரசு மதுபானக் கடை ஊழியரிடம் அவர் கேட்டபோது, இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று அலட்சியமாக அவர்கள் பதில் அளித்துள்ளனர்.
மேலும், அரசு மதுபானக் கடையில் எம்.சி மதுக்குப்பியினுள் நெகிழி மிதந்த இச்சம்பவத்தின் காணொலி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு டாஸ்மாக் நிர்வாகம், கடையில் கலப்படம் நடக்கிறதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.