ETV Bharat / state

எலக்ட்ரானிக் முகக்கவசம்... முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு - corona virus infection

நீலகிரி: குன்னூரை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி கரோனாவை தடுக்கும் முறையில் புதிய எலக்ட்ரானிக் முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளார்.

முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு
முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு
author img

By

Published : May 19, 2020, 10:26 AM IST

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க முடியாமல் நாடே போராடி வருகிறது. இந்நிலையில் இதற்கு உதவும் விதமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பகுதியில் உள்ள முன்னாள் ராணுவ உயர் அதிகாரி கர்னல் ராமகிருஷ்ணன் பிள்ளை, அவரது மனைவி கனக லதா ஆகியோர் ரெஸ்பிரேட்டருடன், எலக்ட்ரானிக் பில்டர்களை பயன்படுத்தி கரோனா தடுப்பு முகக்கவசத்தை தயாரித்துள்ளனர்.

இந்தக் கவசங்கள் விமானப்படை, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் உள்ளவர்கள் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துபவர்கள் ஆக்சிஜன் எளிமையாக உள்ளே செல்லவும் அதில் கரோனா உள்ளிட்ட வைரஸ் கிருமிகள் உயர் மின் அழுத்தத்தில் உயிர் இழக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ அதிகாரி கண்டுபிடிப்பு

இக்கண்டுபிடிப்பை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகளைச் செய்துவருகிறார். மேலும் கரோனா வைரஸ் தொற்று அருகில் உள்ளவர்கள் இருந்தாலும் இதனை பயன்படுத்தும்போது வராமல் தடுக்க முடியும்.

ஊரடங்கு நேரத்தில் தனது நேரத்தை வீணாக்காமல் வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னாள் ராணுவ உயர் அதிகாரி புதிய முகக்கவசத்தை கண்டுபிடித்துள்ளது, ராணுவ பகுதிகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: சைக்கிள் வாங்க சேமித்த பணத்தை நிவாரண நிதிக்கு அனுப்பிய சிறுமி; பரிசளித்த அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.