நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலுக்கு அடுத்தபடியாக மலை காய்கறிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. மேலும், சுற்றுலா தொழில்களையும் நம்பி ஏராளமான மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.
அதிகப்படியாக இங்கு யூகலிப்டஸ் மரத்திலிருந்து காய்ந்து விழும் இலைகளைச் சேகரித்து மருத்துவ குணம்வாய்ந்த யூகலிப்டஸ் தைலம் தயாரிக்கப்படுகிறது. இந்தத் தைலம் சளி, இருமல், இடுப்பு வலி, சுளுக்கு, தசைப்பிடிப்பு போன்ற பல்வேறு நோய்கள் குணமாக உதவுகின்றது.
குடிசைத் தொழிலாக மேற்கொள்ளப்படும் இந்தத் தொழிலை நம்பி சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கரோனா தொற்று பாதிப்பு இவர்களது வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், வாழ்வாதாரமின்றி தவித்துவரும் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், தளர்வுகளுடன் இத்தொழிலைத் தொடங்க அரசு அனுமதியளிக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கை அகதிகள் முகாமில் நிவாரணம் வழங்கிய கனிமொழி