நீலகிரி மாவட்டம், குன்னூர் பேருந்து நிலையத்தில் கடந்த ஓராண்டிற்கு முன்பு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலை தோண்டப்பட்டது. இந்தப்பணியின்போது, பேருந்து நிலையத்திலிருந்த இன்டர்லாக் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. தொடர்ந்து குழிகள் மூடப்படாமலும், இன்டர்லாக் கற்கள் பதிக்கப்படாமலும் இருந்தன.
இதனால் பயணிகள் நடமாட மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும், பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை நிலவி வந்தது. இதுகுறித்து கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் சார்பில் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியின் எதிரொலியாக குன்னூர் நகராட்சி நிர்வாகம் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளன.
கரோனா ஊரடங்கு முடியும்போது, பேருந்துகளை இயக்க எந்த சிரமமும் இல்லாத வகையில் பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - முதியோருக்கு உதவிக்கரம் நீட்டிய பெரம்பலூர் எம்எல்ஏ