ETV Bharat / state

'என்னை சீண்டி பாக்குறீங்களா! இதோ வரேன்' - விளையாட்டு காட்டிய செந்நாய்களை துரத்திய யானை - muthumalai sanctuary

நீலகிரி: உதகையில் உள்ள முதுமலை வனப்பகுதியில் யானை ஒன்று, செந்நாய் கூட்டத்தை துரத்தும் காட்சியை அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

யானையுடன் விளையாடும் செந்நாய்கள்
author img

By

Published : Aug 19, 2019, 12:04 PM IST

Updated : Aug 19, 2019, 12:10 PM IST

தமிழ்நாட்டின் முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்கும் உதகை முதுமலை வனவிலங்கு காப்பகத்திற்கு, ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்வர். மேலும் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கும் சென்று வன விலங்குகளைக் காண சிறியோர் முதல் பெரியோர் வரை ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான் உள்ளிட்ட வனலிலங்குகளை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிப்பது வழக்கம். இந்நிலையில் முதுமலையில் உள்ள வனத் துறை வாகனத்தில் சுற்றுலாப் பயணிகள் செல்லும்போது யானை ஒன்று கூட்டமாக இருந்த செந்நாய்களை துரத்தும் காட்சியை கண்டுகளித்தனர்.

யானையுடன் விளையாடும் செந்நாய்கள்

அதிலும் குறிப்பாக செந்நாய்கள், யானையின் அருகே சென்று விளையாட்டுக் காட்டுவதும், பின்னர் யானை அதனை துரத்துவதுமாக இருந்தது. இந்த அற்புதமான காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ந்தனர். மேலும், அந்த அரியவகை காட்சியை அவர்கள் காணொலி எடுத்துக் கொண்டனர். இந்தக் காணொலி தற்போது வைரலாக பரவிவருகிறது.

Intro:OotyBody:
உதகை 19-08-19
முதுமலை வனப்பகுதியில் யானை செந்நாய் கூட்டத்தை துரத்தும் காட்சியை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.

முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகளின் வருகை இருக்கும். அவ்வாறு உதகை வரும் சுற்றுலா பயணிகள் பூங்காக்கள், படகு இல்லத்தில் படகு சவாரி செய்வது வழக்கம். மேலும் முதுமலை புலிகள் சரணாலயம் சென்று வனவிலங்குகள் காணவும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர். முதுமலை சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் யானை சவாரி மற்றும் வாகன சவாரி செய்வது வழக்கம். இங்கு யானைகள், புலிகள், சிறுத்தை, காட்டெருமை, கரடி, மான்கள் உள்ளிட்ட வனலிலங்குகள் காண்பது வழக்கம். இந்நிலையில் முதுமலையிலுள்ள வனத்துறை வாகனத்தில் சுற்றுலா பயணிகள் செல்லும் போது யானை ஒன்று கூட்டமாக இருந்த செந்நாய்களை துரத்தியதை கண்டனர். அப்போது செய்தார்கள் யானையின் அருகே விளையாட்டாக சென்று யானை துரத்தும் போது ஓடிய வண்ணம் இருந்தது. நீண்ட நேரம் இந்த அரிய காட்சியினை கண்ட சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.
Conclusion:Ooty
Last Updated : Aug 19, 2019, 12:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.