நீலகிரி: சுற்றுத்தளங்களில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி, முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு உள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் ராக் டால்பின் நோஸ், வெலிங்டன் ராணுவ அருங்காட்சியகம் உள்ளிட்ட பகுதிகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தங்கள் சொந்த வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாத் தளங்கள் மூலம் அதிகளவில் வருவாய் ஈட்டும் மாவட்டங்களில், நீலகிரி முன்னிலை வகுத்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா தளங்களுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதானால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதனால் குன்னூரில் உள்ள பல்வேறு சாலைகள் சீரமைக்கும் பணிக்கு மாவட்ட அரசு மேற்கொண்டு வந்தது. இதனால் கடந்த வாரம் குன்னூரில் உள்ள டால்பின் நோஸ் செல்லும் சாலையில், ரூபாய் 25 லட்சம் செலவில் சாலை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. சாலை சீரமைக்கும் பணியில் போடப்பட்ட தார் மற்றும் ஜல்லிக் கலவையின் தரம் குறைவாக இருந்ததால் சாலையில் பிடிப்பு தன்மை இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், புதிதாகப் போடப்பட்ட சாலை பயன்பாட்டிற்கு முன்னரே பெயர்ந்து வந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் நடைபெற்று வந்த சாலை சீரமைக்கும் பணிகளைப் பாதியிலேயே நிறுத்தினர்.
இது குறித்து நமது ஈடிவி செய்தி நிறுவனத்தின் மூலம் விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து குன்னூர் நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பார்வைக்கு இந்த வீடியோ வெளிச்சம் ஊட்டிய நிலையில், சாலை அமைக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வு செய்த அதிகாரிகள், 700 மீட்டர் தூரம் வரை அமைக்கப்பட்டு இருந்த சாலையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், புதிதாகத் தரமுடன் கூடிய சாலை அமைக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரிடம் எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து தரம் இல்லாமல் போடப்பட்ட சாலையை ஜேசிபி இயந்திரம் கொண்டு, முழுவதுமாக அகற்றிவிட்டு, புதிதாகத் தரம் வாய்ந்த சாலை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், மீண்டும் தரமான பொருட்களுடன் சிறப்பு வாய்ந்த பணிகளுடன் சாலை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த செயலுக்கு முக்கிய பங்கு, ஈடிவி செய்தியின் எதிரொலி எனப் பொதுமக்கள் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Onam celebration: கோவையில் களைகட்டும் ஓணம் பண்டிகை..சித்தாப்புதூர் கோயிலில் சிறப்பு தரிசனம்