நீலகிரி மாவட்டத்தில் குன்னுார் பகுதிகளில் பல்வேறு அரிய வகை, மூலிகைத் தாவரங்கள், பழங்கள் விளைகின்றன. இதில் குன்னூர் பர்லியார் அரசுத் தோட்டக்கலை பண்ணையில், விளையும் துரியன் பழங்கள் முக்கியமான ஒன்று. இந்தப் பழத்தில் ஆண்களின் மலட்டுத்தன்மையை நீக்கும் மருத்துவக் குணம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால் இந்தப் பழத்திற்கு மக்கள் மத்தியில் கிராக்கி தான். அரசு தோட்டக்கலை பண்ணையில் உள்ள 33 மரங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் காய்க்கத் தொடங்கும் இந்தப் பழம் மரத்திலிருந்து தானாக கீழே விழுந்த பிறகே பழங்களை எடுத்து விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்குள்ள பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு போதிய மழையில்லாத நிலையில் பழ விளைச்சல் குறைந்திருந்தது. இந்தாண்டு தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில், ஜூலை மாதம் முதல் விற்பனையை தொடங்க தோட்டக்கலைத் துறையினா் முடிவு செய்துள்ளனா்.
இதையும் படிங்க; 'அடித்தட்டு மக்களின் குரல் ஐநாவில் எதிரொலிக்கும்' - நெகிழ்ச்சியில் நேத்ரா