வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நீலகிாி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனுடன் கடும் பனிமூட்டமும் நிலவுகிறது. பனிமூட்டம் காரணமாக நேற்றிரவு குன்னூர் - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாலக்காட்டிலிருந்து ஊட்டி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து காட்டோி அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முப்பதடி பள்ளத்தில் பாய்ந்தது.
இந்த விபத்தில் பேருந்திலிருந்த முப்பது பயணிகள் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினா். பின்னால் வந்த லாரிக்கு வழிவிட முயன்றபோது கடும்பனி காரணமாக அரசுப்பேருந்து பள்ளத்தில் பாய்ந்ததாக கூறப்படகிறது. ஓட்டுநர் பதட்டப்படாமல், பள்ளத்தில் சீரான வேகத்தில் பேருந்தை இறக்கியதால் பேருந்து கவிழாமல் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினால் அங்கு இரண்டு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்படைந்தது.
கடும் பனிக்காலங்களில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். பகல் நேரங்களிலும் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் செல்வது நல்லது என்று போக்குவரத்துக் காவல் துறையினர் அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க: திம்பம் மலைப்பாதையில் கடும் பனி மூட்டம்; சிரமத்தில் வாகன ஓட்டிகள்