மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவதூறாக பேசி வரும் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நீலகிரியில் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
நேற்று (டிச.09) கோத்தகிரியில் நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து, இன்று குன்னுார் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினர் சாந்தி ராமு தலைமையில் ஆ. ராசாவை கண்டித்து அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, ஆ. ராசாவின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். ஆனால், காவல் துறையினர் அதிமுகவினரிடம் இருந்து உருவ பொம்மையை பிடுங்கினர்.
இதனால், காவல் துறையினருக்கும் அதிமுகவினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு, ஏற்பட்டது. இதன் காரணமாக குன்னூரில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சருக்கும் அதிமுக கட்சியினருக்கும் தள்ளு முள்ளு