கரோனா தொற்று தீவிரமடைந்ததை அடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்கள் மட்டும் வாங்கிச் செல்ல அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக ஒன்று சேர்வதால் கரோனா தொற்று பரவும் சூழல் உருவாகும்.
இதனால், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக திறந்த வெளியிடங்களில் கடைகள் அமைக்க உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வந்த முக்கியமான மார்க்கெட்டுகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இங்கு பொது மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும், கிராம பகுதிகளுக்கு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர், "உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாகன வசதி இல்லாத இடங்களுக்கு நடமாடும் காய்கறி வாகனம் இயக்கப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஊரடங்கில் உதவிக்கரம் நீட்டிய மனிதநேயர்